குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.. பொண்ணு யார் தெரியுமா
மாதம்பட்டி ரங்கராஜ்
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ். குறிப்பாக பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தனது குழுவுடன் சமையல் செய்து கொடுத்து வருகிறார்.
2019ம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி பெயர் ஸ்ருதி.
கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஜாய் கிரிஸில்டாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜுடன் கொண்டாடினேன்' என குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
திருமணம்
அதுமட்டுமின்றி அவர் தனக்கு பூ வாங்கி தந்ததாக கூறிய ஜாய் கிரிஸில்டா, தனது பெயர் 'ஜாய் ரங்கராஜ்' என எழுதிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இப்படி ஜாய் கிரிஸில்டா பதிவுகள் போட்டு வந்ததால், அவரும் ரங்கராஜும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என தகவல்கள் பரவின. ஆனால், இருவரும் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர்.
இந்த நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். கோயிலில் இவர்களுடைய திருமணம் சிம்பிளாக நடைபெற்றுள்ளது. தங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைத்துள்ளனர்.
