படப்பிடிப்பு கூட இன்னும் துவங்கவில்லை, அதற்குள் ஏ.ஆர் ரஹ்மான் செய்த விஷயம்.. D50 படம் அப்டேட்
D50
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள திரைப்படம் D50. இப்படத்தில் நடிப்பது மட்டுமின்றி அவரே இயக்கவும் முடிவு செய்துள்ளார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. மேலும் இப்படத்திற்கு ராயன் எனும் தலைப்பு வைக்கப்போவதாக பேசப்படுகிறது. இதுமட்டுமின்றி இப்படத்திற்காக தான் மொட்டை அடித்து தன்னுடைய கெட்டப்பை கூட தனுஷ் மாற்றியுள்ளாராம்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் அப்டேட்
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் துவங்காத நிலையில், அதற்குள் இப்படத்திற்காக இரண்டு பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டாராம் ஏ.ஆர். ரஹ்மான்.
D50 குறித்து அப்டேட் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது செம அப்டேட்டாக வெளியாகியுள்ளது.
கின்னஸ் சாதனை செய்த எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை- யார் பாருங்க, என்ன சாதனை