100 கோடி பட்ஜட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் D50.. இத்தனை நடிகர்களா, வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
D50
தனுஷ் தன்னுடைய 50வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படம் தான் இதுவரை தனுஷ் நடித்ததில் அதிக பட்ஜெட் கொண்ட படம்.

லேட்டஸ்ட் தகவல்
இந்நிலையில், இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக எஸ்.ஜே. சூர்யா மற்றும் சந்தீப் கிஷான் நடிக்கிறார்கள்.
மேலும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வடசென்னை சார்ந்த கதைக்களத்தில் உருவாகிறதாம்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. கேப்டன் மில்லர் படம் முடிந்தவுடன் இப்படத்தின் வேலைகளை தனுஷ் ஆரம்பிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் அப்பாஸ் வெளிநாட்டில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?.. வெளியன புதிய தகவல்! 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    