பிரபுதேவா மகளா இது?.. குடும்பத்துடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க
பிரபுதேவா
இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் மைக்கேல் ஜாக்சனாக கொண்டாடப்படும் பிரபலம் என்றால் அது பிரபுதேவா தான். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பலரை தனது நடன அமைப்பின் மூலம் மாஸாக நடனம் ஆட வைத்தவர்.
காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் தொடர்ந்து நடித்தார்.
நடிகர், நடன அமைப்பாளர் என கலக்கிவந்த பிரபுதேவா 2005ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார். தெலுங்கில் அவர் இயக்கிய முதல் படம் தான் தமிழில் சம்திங் சம்திங் என ரீமேக் செய்யப்பட்டது.
பின் தமிழ் சினிமா பக்கம் வந்த பிரபுதேவா போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வெங்கட் பிரபு இயக்கிய GOAT படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மகளா இது?
இந்நிலையில், பிரபு தேவா திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தன் மனைவி மற்றும் செல்ல மகளுடன் சென்று பிரார்த்தனை செய்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
