Deadpool & Wolverine திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் மார்வல் சினிமாவிற்கு இருக்கும் பேன் பாலோயிங் வேற லெவல் தான், இதில் சூபப்ர் ஹீரோக்களிலேயே இவர் நல்லவரா, கெட்டவரா என்பது போட் அட்டகாசம் செய்யும் டெட்பூல் டெட்பூல் பாகத்தில் 3ம் பாகத்தில் சீரியஸ் வுல்வுரின் சேர, இவர்கள் கூட்டணி எப்படி அமைந்தது பார்ப்போம்.
கதைக்களம்
டெட்பூல் தான் இந்த உலகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று avengers டீம்-ல் சேர செல்கிறார். அங்கு அவரை ரிஜெக்ட் செய்ய, சோகத்துடன் ஒரு சேல்ஸ் வேலைக்கு செல்கிறார்.
அங்கிருந்த டெட்பூல்-யை அலேக்காக தூக்கி TVI Organization இந்த உலகத்தை அழிக்கப்போறோம், வேற ஒரு டைம் லைனில் உனக்கு புடிச்சது போல் இருக்கலாம் என்று டெட்பூல் மண்டையை கழுவுகின்றனர்.
அவர் சுதாரித்துக்கொண்டு ஒரு யுனிவர்ஸின் ஆதாராம் யார் என்பதை கண்டுபிடித்து, அவர்களை வைத்து தன் உலகத்தை காப்பாற்றி ஹீரோ ஆகலாம் என்று நினைகிறார்.
அப்படி பல யுனிவர்ஸ் சென்று ஒரு தகுதியான வுல்வுரினை தேர்ந்தெடுக்க, பிறகு AVL இவர்களுக்கு குறி வைக்க, அவர்களை மீறி டெட்பூல், வுல்வுரில் உதவியுடன் தன் உலகை காப்பாற்றினாரா, என்பதன் அதகளம் தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
டெட்பூல் படம் என்றாலே 4த் வாள் ப்ரேக் செய்து ஆடியன்ஸிடம் ஒவ்வொரு காட்சிக்கு பேசி அட்ராஸிட்டி செய்வார்கள். அதே போல் தான், வுல்வுரினை தேடி அலையும் டெட்பூல் ஆரம்பமே அதிரடி சாகசத்தில், டைட்டில் போடுவது சூப்பர்.
அதிலும் தமிழ் டப்பிங் கண்டிப்பாக 18+ தான், குழந்தைகள் கண்டிப்பாக படத்தின் வசனத்திற்காகவே அழைத்து செல்ல கூடாது.
டெட்பூல் கேரக்டருக்கு லிமிட் என்பதே இல்லை, யார் கிடைத்தாலும் வாரி எடுத்துவிடுவார், இதிலும் வாரு வாரு என்று வாரியுள்ளார். அதிலும் பாக்ஸ் ஸ்டுடியோவில் இருந்த டெட்பூல் டிஸ்னி-க்கு சென்றதை என்ன சம்பள பாக்கி வைத்து விட்டார்களா என்று கலாய்த்து எடுத்துள்ளார்.
மேலும், படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கிறது, போதாத குறைக்கு வுல்வுரினும் இவர்களுடன் சேர்ந்து மிரட்டியுள்ளார்.
உலகத்தை காக்கும் இந்த ப்ராசஸில், பல கேமியோக்கள் வந்து செல்கிறது, மார்வெல் உலகில் யாரும் எதிர்ப்பார்த்திராத ப்ளேடு Entry எல்லாம் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்.
அதோடு ஒரு யுனிவர்ஸில் ஜென்ரி வுல்வுரினாக வருவதெல்லாம் ஜெய்லர் கிளைமேக்ஸில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோல் செய்தால் எப்படியிருக்கும் அப்படி ஒரு சம்பவம்.
கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை மாற்றி கலாட்டா செயதது எல்லாம் ரகளை. அதே நேரத்தில் பல அடிதடி சண்டைகள் இருந்தாலும், வேட் என்ற உலகத்திற்கு சென்றவுடன், டெட்பூல், வுல்வுரின் பேசுகிறார்கள், சண்டை போடுகிறார்கள், பேசுகிறார்கள், சண்டை போடுகுறார்கள் என பொறுமையை சோதித்து விட்டனர்.
அட என்ன தான்பா பண்ண போறீங்க என்று டெட்பூல் நம்மிட பேச வேண்டாம், நாமளே டெல்புல்-டம் கேட்கும் நிலைக்கு சென்றுவிட்டது.
படத்தின் டெக்னிக்கல் டீம் கடுமையாக உழைந்த்துள்ளனர், குறிப்பாக ஒளிப்பதிவு, இசை பிரமாதம்.
க்ளாப்ஸ்
வழக்கம் போல டெட்பூல் நகைச்சுவையான டயலாக்ஸ். அது மட்டுமே படத்தை தாங்கி நிற்கிறது.
சண்டைக்காட்சிகள்
பல்ப்ஸ்
பெரிய சுவாரஸ்யம் இல்லாத தெரிந்த காட்சிகள்.
சூப்பர் ஹீரோஸிலேயே பல முற்போக்கு சிந்தனைகள் வர, இதில் எதோ உடல் மோகம் சார்ந்த காமெடி காட்சிகள் தியேட்டரில் கைத்தட்டி ஆடியன்ஸை ரசிக்க வச்சாலும், பிற்போகுத்தனத்தையே காட்டுகுறது.
மொத்தத்தில் உலகத்தை காப்பாற்றும் மற்றுமொரு நார்மல் சூப்பர் ஹீரோ படமே இந்த டெட்பூல் & வுல்வுரின்