தீபாவளியில் அஜித்துடன் முதல் ஆளாக மோதும் முக்கிய நடிகர் ! வெளியான மாஸ் போஸ்டர்..

By Jeeva May 24, 2022 03:50 PM GMT
Report

தீபாவளியில் வெளியாகும் கார்த்தியின் திரைப்படம் 

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் இப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்தஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் PS மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் மாஸ் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்படம் தீபாவளியில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனிடையே இப்போதே தீபாவளியில் மோதவுள்ள இரண்டு முக்கிய திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த தீபாவளி ரேஸில் இன்னும் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே இதேபோல் கார்த்தியின் கைதி திரைப்படம் விஜய்யின் பிகில் படத்துடன் மோதியது, ஆனாலும் அப்படம் 100 கோடிளவில் வசூல் செய்திருந்தது.   

 தீபாவளியில் அஜித்துடன் முதல் ஆளாக மோதும் முக்கிய நடிகர் ! வெளியான மாஸ் போஸ்டர்.. | Deepavali Clash Karthi Movie Vs Ajith

விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட கண்டிஷன்! அந்த மாதிரி வசனங்கள் வேண்டாம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US