தெலுங்கில் தீபிகா படுகோன் வாங்கும் சம்பளம்.. நயன்தாராவை விட இவ்ளோ அதிகமா
தீபிகா படுகோன்
ஹந்தி நடிகை தீபிகா படுகோன் தற்போது உலக அழகில் பிரபலமான நடிகையாகிவிட்டார். அவர் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருப்பது தான் காரணம். மேலும் அவர் இந்த வருட ஆஸ்கார் விருது விழாவை தொகுத்து வழங்க இருக்கிறார்.
தீபிகா மற்றும் ஷாருக் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.

ப்ராஜெக்ட் K சம்பளம்
இந்நிலையில் தற்போது பிரபாஸ் ஜோடியாக ப்ராஜெக்ட் K என்ற படத்தில் தீபிகா நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தான் அந்த படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது தீபிகா ப்ராஜெக்ட் K படத்திற்காக வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. தீபிகாவுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.
நயன்தாரா கடைசியாக தெலுங்கில் நடித்த படத்திற்கு 4 கோடி தான் சம்பளமாக பெற்றார். அவரை விட தீபிகா பல மடங்கு சம்பளம் வாங்குவது தற்போது உறுதியாகி இருக்கிறது.

விஜய் படத்தை தான் என் மகனுக்கு முதலில் காட்டுவேன்: காஜல் அகர்வால்