விஜய் படத்தை தான் என் மகனுக்கு முதலில் காட்டுவேன்: காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நீல் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது.
பிரசவத்திற்காக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த காஜல் தற்போது மீண்டும் பழையபடி நடிப்பை தொடங்கி இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் காஜல் தனது குழந்தையின் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

’துப்பாக்கி’ படம் முதலில் காட்டுவேன்
தனது மகன் நீல் கிச்லுவை வளர்க்கும் விதம் பற்றி காஜல் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். மகனுக்கு 8 வயது ஆகும் வரை மொபைல், டிவி உள்ளிட்ட விஷயங்களை காட்ட மாட்டேன் என கூறி இருக்கும் அவர் screen time என்கிற விஷயத்தின் மீது அதிகம் அக்கறை காட்டுவதாக கூறி இருக்கிறார்.
மேலும் 8 வயதுக்கு பிறகு தான் படங்களும் பார்க்க அனுமதிப்பேன், என் மகனுக்கு துப்பாக்கி படத்தை தான் முதலில் காட்டுவேன் என காஜல் கூறி இருக்கிறார்.
காஜல் கெரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் தான் துப்பாக்கி. விஜய்க்கு ஜோடியாக அவர் அதில் நடித்து இருப்பார். அந்த படத்திற்கு பின் தான் காஜலுக்கு மேலும் அதிக பட வாய்ப்புகள் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பாரதி கண்ணம்மா 2ல் முக்கிய நடிகை மாற்றம்! ஒரே மாதத்திற்குள் இப்படியா