டிமாண்டி காலனி 2 படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
டிமாண்டி காலனி 2
இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அறிமுக இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டிமாண்டி காலனி. இப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அறிமுக படமே இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின் டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவந்துள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் நேற்று திரையரங்கில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அஜய் ஞானமுத்துவிற்கு இப்படம் நல்ல கம் பேக்காக அமைந்துள்ளது என்றும், அருள்நிதி மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் ரசிகர்களால் கூறப்பட்டது.
வசூல்
இந்த நிலையில், டிமாண்டி காலனி திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
