5 நாட்களில் டிமான்டி காலனி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
டிமான்டி காலனி 2
கடந்த வாரம் வெளிவந்த திரைப்படங்களில் டிமான்டி காலனி 2 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கோப்ரா படத்தின் மூலம் தோல்வியை சந்தித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
முதல் பாகத்துடன் இரண்டாம் பாகத்தை இணைத்த விதமே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இரட்டை வேடத்தில் நடித்து அருள்நிதி அசத்தியிருந்தார். மேலும் பிரியா பவானி ஷங்கர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வந்த கடுமையான விமர்சனங்களும் டிமான்டி காலனி 2 வெற்றியின் மூலம் தகர்த்தெறியப்பட்டது.
வசூல்
இந்த நிலையில், 5 நாட்களை கடந்துள்ள டிமான்டி காலனி 2 திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 23 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
