தேசிங்குராஜா 2 திரை விமர்சனம்
தமிழ் சினிமாவே ஆக்ஷன், அதிரடி, வெட்டு குத்து என இருக்கும் போது தன் படங்கள் மூலம் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த எழில் தன் சூப்பர் ஹிட் படமான தேசிங்குராஜா டைட்டிலை பயன்படுத்தி இரண்டாம் பாகம் எடுத்துள்ளார், முதல் பாகத்தை போல இரண்டாம் பாகமும் நம்மை சிரிக்க வைத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
விமல் புகழ் இருவருமே வேறு வேறு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் எதோ ஒரு வகையில் முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றனர்.
அதை தொடர்ந்து மார்க்கெட் ராஜா என்பவரை கொல்கின்றனர், அவர் தலையை வேறு ஒரு இடத்தில் வைக்க, அது பல இடத்திற்கு இடம்பெயர்கிறது.
அதோடு மினிஸ்டர் மகனை படத்தின் இரண்டாம் நாயகன் சத்யா கொலை செய்தே தீருவேன் என கங்கனம் கட்டுகிறார். அதற்காக மினிஸ்டர் தன் மகனை பத்திரமாக வேறு ஒரு வழக்கிற்காக கோர்டில் ஆஜர் படுத்த போலிஸிடம் உதவி கேட்கிறார்.
விமல் அந்த பொறுப்பை எடுக்க சத்யா எப்பாடியோ மினிஸ்டர் மகனை கொன்று விடுகிறார், இது வரைக்கும் என்ன நடந்தது என்று நாம் புரியாமல் படம் பார்க்க, இதன் பிறகு என்ன ஆனது என்பதன் தலைவலியே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
எழில் ஒரு காலத்தில் விஜய்-அஜித்துக்கே அவ்வளவு அழகாக கதை எழுதி படம் எடுத்தவர், தமிழ் சினிமாவிற்கு சிவகார்த்திகேயனை நடிகராக அறிமுகப்படுத்தியவர். அப்படிப்பட்டவரிடம் இவ்வளவு மோசமான ஒரு படத்தை எதிர்ப்பார்க்கவில்லை.
காமெடி என்ற பெயரில் கத்து கத்தி நம்மை கதற விடுகின்றனர். புகழ் லேடி கெட்டப் எல்லாம் ஓகே தான், ஆனா ஏன் இவ்வளவு சத்தமான டப்பிங், அவரின் சத்தம் நமக்கு இன்னும் தலைவலியை தான் கொடுக்கிறது.
விமல் எல்லாம் எதோ வேண்டா வெறுப்பாக எழில் நமக்கு ஹிட் கொடுத்தவர், அவர் படத்தில் தலையை காட்டுவோம் என்ற மோட்-ல் தான் வந்து செல்கிறார்.
படத்தில் சிங்கம்புலி, சுவாமிநாதன், ரவி மரியா, சாம்ஸ், வையாபுரி என காமெடி பட்டாளமே இருந்தாலும் ஒரு இடத்திலாவது முடிஞ்சா சிரிச்சு காட்டுங்க என் காமெடிக்கு என்று சவால் விட்டு கொண்டே இருக்கின்றனர்.
இதற்கு மேல் இந்த படத்தை பற்றி சொல்ல தேவையில்லை, சொல்வதற்கும் ஒன்றுமில்லை, டெக்னிக்கலாகவும் படம் சொதப்பல் தான்.
க்ளாப்ஸ்
சொல்வதே கஷ்டம்
பல்ப்ஸ்
படமே