கார்த்தி-தமன்னா நடித்த பையா படத்தின் 2ம் பாகம் குறித்து லிங்குசாமி கொடுத்த அப்டேட்- அடடே சூப்பர்
பையா படம்
தமிழ் சினிமாவில் 2010ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஜோடியாக நடிக்க வெளியான திரைப்படம் பையா.
படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான அடடா மழைடா, துளி துளி, என் காதல் சொல்ல உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.
அழகான காதல் கதையை மையப்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவான இப்படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலமுறை கேள்வி கேட்டுவிட்டார்கள்.
இயக்குனர் பதில்
பையா படத்தின் 2ம் பாகம் குறித்து லிங்குசாமி கூறும்போது, பையா படத்தின் 2ம் பாகம் நிச்சயம் வரும், 2ம் பாகத்தின் கதையை தயார் செய்துவிட்டேன்.
கார்த்தியிடம் கதை குறித்து சொன்ன போது அவர் படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டதால் தனது தோற்றத்தில் முதிர்ச்சி வந்துள்ளதாலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்து விட்டதாலும் பையா 2 படத்தில் நடிக்க யோசிக்கிறார்.
இதனால் வேறு நடிகரை வைத்து படம் எடுப்பேன், கார் படத்தில் இருக்கும், ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள் என்றார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
