அஜித்தின் 64வது படத்தின் இயக்குனர், நாயகி பற்றிய தகவல்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
அஜித்
நடிகர் அஜித், சினிமாவை ரசிக்கும் ஒருவர் இப்போது இன்னொரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கார் ரேஸில் அதிக ஆசைக்கொண்ட அஜித் இடையில் படங்கள் மட்டுமே நடித்து வந்தவர் இப்போது கார் ரேஸில் முழுவதுமாக களமிறங்கியுள்ளார். அவர் களமிறங்கும் எல்லா இடங்களிலும் வெற்றியை கண்டு வருகிறார்.
இன்னொரு பக்கம் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படமும் செம பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை படமாக அமைந்தது.

அடுத்த படம்
அஜித் தனது 64வது படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் அஜித்தின் 64வது படத்தை குட் பேட் அக்லி பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க இருப்பதாகவும் வேல்ஸ் பிலிம் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri