90ஸ் காலகட்டத்தை இசையால் ஆட்டிப்படைத்த தேனிசை தென்றல் தேவா.. அவர் செய்த சாதனை
தேனிசை தென்றல் தேவா
மாட்டுக்கார மன்னாரு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவநேசன் சொக்கலிங்கம்.
இப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த தேவா அவர்கள் கானா மற்றும் மெலோடி இரண்டிலும் கொடிகட்டி பறந்தார்.
ஆரம்பத்தில் தேவா என்று அழைக்கப்பட்டு வந்த இவர், காலப்போக்கில் தனது இசையால் ரசிகர்கள் அனைவராலும் தேனிசை தென்றல் தேவா என்று அழைக்கப்பட்டார்.
கானா பாடலுக்கு பேர்போன இசையமைப்பாளர் என்றால் அனைவருக்கும் உடனடியாக நியாபகம் வருவது தேவா அவர்களின் முகம் தான்.
செய்த சாதனை
இந்நிலையில், 90ஸ் காலகட்டத்தில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இசையமைப்பாளர் தேவா அந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை படங்களுக்கு இசையமைத்துள்ளார் தெரியுமா..
இதோ அந்த சாதனையின் லிஸ்ட்..
- 1991ஆம் ஆண்டு - 16 படங்கள்
- 1992ஆம் ஆண்டு - 25 படங்கள்
- 1993ஆம் ஆண்டு - 22 படங்கள்
- 1994ஆம் ஆண்டு - 29 படங்கள்
- 1995ஆம் ஆண்டு - 28 படங்கள்
- 1996ஆம் ஆண்டு - 26 படங்கள்
- 1997ஆம் ஆண்டு - 34 படங்கள்
- 1998ஆம் ஆண்டு - 21 படங்கள்
- 1999ஆம் ஆண்டு - 26 படங்கள்
இப்படி 90ஸ் காலகட்டத்தில் இசையால் நம்மை ஆட்டிப்படைத்த தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் இன்று போல் என்றும் நலமுடனும், இசையுடனும் நன்றாக வாழ எங்கள் சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்..

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
