தேவரா படத்தின் முதல் நாள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா
தேவரா
தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் நேற்று பிரமாண்டமான முறையில் வெளிவந்த திரைப்படம் தேவரா.
இப்படத்தை பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். மேலும் ஜான்வி கபூர், கலையரசன், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேவரா திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் வசூல்
அதன்படி, தேவரா படம் முதல் நாள் உலகளவில் ரூ. 140 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
முதல் நாளே உலகளவில் வசூல் ரீதியாக இப்படம் பட்டையை கிளப்பியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த உச்சத்தை தொடும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
