49 வயதிலும் முகம் பளபளப்பாக இருக்க நடிகை தேவயானி செய்வது என்ன? இதுதான் அந்த ரகசியம்
தேவயானி
திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை தேவயானி. இவர் இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், 49 வயதாகும் நடிகை தேவயானி தனது முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதுதான் அந்த ரகசியம்
அதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் உணவு சாப்பிடுவாராம். Fast Foods அனைத்தையும் தவிர்த்துவிட்டு, அதிக காய்கறிகள் கொண்ட உணவு தான் சாப்பிடுவாராம்.
உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாம். அதிகளவு தேங்காய் எண்ணெய்யை தனது முகத்தில் பயன்படுத்துவாராம். அது தான் அவருடைய முகத்தின் பளபளப்பிற்கு காரணம் என்கின்றார்.
மேலும், தேவையில்லாத பொருட்களை முகத்தில் பயன்படுத்தமாட்டாராம். ஒரே ஒரு சோப் மற்றும் நீண்ட காலமாக ஓரே ஸ்கின் கேர் தான் பயன்படுத்தி வருகிறாராம்.
இதுமட்டுமின்றி தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தேய்த்தபின் தான் குளிப்பாராம். இவை தான் அவருடைய உடல் ஆரோக்கியம் மற்றும் முகம் பளபளப்பாக இருக்க காரணம் என்கிறார்.
சஹானா சாரல் தூவுதோ.. மாடர்ன் பட்டுப்புடவையில் ரசிகர்களை மனதை கொள்ளைகொண்ட நடிகை ஸ்ரேயா