என் புருஷனை சந்தானம் மிக மோசமாக கலாய்த்தார்.. நடிகை தேவயானி ஓப்பன் டாக்
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டதிக் கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
இவர் இயக்குநர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநராக மட்டுமின்றி சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று தான் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
தேவயானி ஓப்பன் டாக்
இந்த நிலையில், இப்படத்தில் தனது கணவர் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் நடிகை தேவயானி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "என் புருஷனை சந்தானம் மிக மோசமாக கலாய்த்தார். சந்தானம் கலாய்த்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு அது பிடிக்கவில்லை. எனது கணவர் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று கூட எனக்கு தெரியவில்லை. சந்தானம் படத்தில் நடிக்கிறார் என்று தெரியும். ஆனால் இது போன்ற கதாபாத்திரம் என்று எனக்கு தெரியாது" என கூறியுள்ளார்.