Devil's Double Next Level திரை விமர்சனம்
சந்தானம் எப்போதெல்லாம் தன் வண்டி ப்ரேக் டவுன் ஆகுதோ அப்போதெல்லாம் கண்ணாயிரம் அந்த வெப்பன்ஸ் எடு என்கிற மாதிரி இந்த பேய் கதையை கையில் எடுத்துவிடுவார், அப்படி 4வது முறை எடுத்துள்ள இந்த Devil's Double Next Level இந்த முறையும் வெற்றியை கொடுத்ததா, பார்ப்போம்.
கதைக்களம்
சந்தானம் கிஷா என்ற பெயரில் அனைத்து படங்களையும் கலாய்த்து விமர்சனம் செய்ய, அவரால் பல படங்கள் தோல்வி அடைகிறது.
இந்நிலையில் சினிமா இயக்குனராக இருந்து ஒரு சிலரால் கொல்லப்படுகிறார். அவரோ ஒரு தியேட்டரில் பேய் ஆக இருக்க, பல விமர்சகர்களை ஸ்பெஷல் ஷோ என்று அழைத்து கொல்கிறார்.
அப்படி சந்தானம் குடும்பத்தை அந்த தியேட்டருக்கு வரவைத்து எல்லோரையும் திரையில் ஓடும் படத்தில் சிக்க வைக்கிறார்.
அந்த படத்தில் சைக்கோ கில்லர், பேய் என பல கதாபாத்திரம் வர, அவர்களிடமிருந்து சந்தானம் தப்பித்து, தன் குடும்பத்தை காப்பாற்றி, அந்த படத்திலிருந்து ரியல் உலகிற்கு வந்தாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சந்தானம் ஒரே வண்டியை வைத்து ஓயாமல் ஓட்டி வருகிறார், ஆனால், அதுவும் எத்தனை நாள் தான் தாங்கும், கண்டிப்பாக ஒரு நாள் பெட்ரோல் தீர்ந்து தானே ஆகவேண்டும்.
அப்படி ஆகிவிட்டது இந்த டெவில்ஸ் டபுள்ஸ். சந்தானம் படத்திற்குள் மாட்டியதும் திரைக்கதை சூடுபிடிக்கிறது தான், ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் இது தானா இப்போது நடக்கபோகிறது என தோன்றுகிறது.
தில்லுக்கு துட்டு சீரியஸில் முதல் பாதி டொங்கலாக சென்றாலும், இரண்டாம் பாதி காமெடி சரவெடியாக இருக்கும், ஆனால், இதில் ஆரம்பத்தில் கதைக்குள் சென்றாலும் காமெடி தான் க்ளிக் ஆகவில்லை.
முதல் பாதியில் தாய் மொழியை சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மொழி பெயர்ப்பு செய்யும் இடம், மஞ்சுமல் பாய்ஸ் ரீகிரியட் சீன், இரண்டாம் பாதியில் பேய் மற்றும் அடியாட்களிடம் மாட்டாமல் நிகழ்கள் ரவியை பேய் புத்தகததை படிக்க வைக்கும் காட்சிகள் சிரிப்பு சரவெடியாக உள்ளது.
ஆனால், இவை படம் முழுவதும் அதிலும் சந்தானம் ஒன் லைன் கூட பல இடங்களில் சிரிப்பு வராதது கொஞ்சம் வருத்தம், இதெல்லாம் விட படத்திற்கு மாட்டிக்கொண்டதும் லொல்லு சபா மாறன், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி என எல்லோர் நடிப்பும் நன்றாக உள்ளது.
சினிமாவிற்கு தாய் மொழியில் பேசும் போது கீழே பார்த்து சப்டைட்டில் படிப்பது என ஒரு சில நக்கல் காட்சிகள் உள்ளது, படத்தில் சந்தானம் தாண்டி மொட்டை ராஜேந்திரன் தான் கலக்கியுள்ளார்.
ஒரு எலியிடம் அவர் மாட்டி சிலையாக நிற்கும் காட்சி கடைசியில் எமோஷ்னல் எண்டிங் என அவர் பாத்திரம் கச்சிதம், அதே நேரத்தில் கஸ்தூரி, யாஷிகா எதற்கு இவ்வளவு கிளாமர் காட்சிகள், இந்த படத்தையெல்லாம் குடும்பமாக பார்ப்பார்கள் என்பதே மறந்து முகம் சுளிக்கும்படி சில காட்சிகள் உள்ளது.
டெக்னிக்கலாக படம் வலுவாகவே உள்ளது, ஒளிப்பதிவு படத்திற்குள் படம், ஹாரர் ஜானர், திரில்லர் ஜானர் என அதற்கு ஏற்றது போல் இருக்கிறது, இசை எதோ DJ போல் உள்ளது.
க்ளாப்ஸ்
இரண்டு, மூன்று காமெடி சீக்குவன்ஸ்.
படம் நன்றாக இருந்தால் ஓடப்போகிறது என்ற கான்செப்ட்-யை கதையாக எழுதிய விதம்.
பல்ப்ஸ்
என்ன தான் நகைச்சுவை என்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல், கிளைமேக்ஸ் எல்லாம் எப்படா முடியும் என்ற நிலை உருவாகிவிடுகிறது.
முந்தைய பாகத்தில் உள்ள காமெடி மிகவும் மிஸ்ஸிங்.
மொத்தத்தில் இதுவரை வந்த DD சீரிஸில் ஹாரரமும் கம்மி, காமெடியும் கம்மி என்றால் அது இந்த டெவில்ஸ் டபுள்ஸ் தான்.

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
