நெஞ்சு வலியால் படுத்த தயாரிப்பாளர் தனஞ்செயன்.. வீடியோவை நீங்களே பாருங்க
ஒரு படத்திற்கு ப்ரோஷன் செய்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். அதையும் மக்கள் மனதை கவரும் வகையில் செய்வது இன்னும் கடினம் தான்.
தயாரிப்பாளர் தனஞ்சயன்
ஆனால், அதை சிலர் மிகவும் கலகலப்பான வழியில் எடுத்துச்சென்று படத்தை அழகாக ப்ரோமோஷன் செய்வார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் தயாரிப்பாளர் தனஞ்சயன். இவர் தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ரத்தம்.

இப்படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்க C.S அமுதன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் மஹிமா நம்பியார், நந்திதா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
ப்ரோமோஷன் வீடியோ
இந்நிலையில், இப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது என ப்ரோமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில் ரத்தம் படத்திற்கான ஒவ்வொரு ப்ரோமோஷன் விஷயங்களையும் விஜய் ஆண்டனியிடம் தயாரிப்பாளர் தனஞ்சயன் தொடர்ச்சியாக கூறிக்கொண்டே இருக்க, திடீரென அவருக்கு நெஞ்சு வலி வந்து ஆம்புலன்சில் செல்கிறார்.
அப்போது கூட படத்தின் ரிலீஸ் தேதியை கூறிவிட்டு தான் செல்கிறார். இதை அழகாக தொகுத்து ப்ரோமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ..
எச்சரிக்கை ? வரும் செப்டம்பர் 28, தமிழ் நாட்டுக்கு ரத்தம் வரப்போது. pic.twitter.com/3hO82859sT
— vijayantony (@vijayantony) September 3, 2023
இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் சமந்தா..