தனுஷின் 50ம் படம்.. மீண்டும் இணையும் பிரம்மாண்ட கூட்டணி! இயக்குனர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ்.
தனுஷ் நடிப்பில் அடுத்த்தாக வாத்தி, கேப்டன் மில்லர் என பல படங்களை லைன் அப் வைத்துள்ளார். மேலும் இயக்குனர் ஹெச் வினோத் தனுஷிடம் கதை சொன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்
50 வது படம்
இந்நிலையில் தனுஷின் 50 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
அட கேரளாவில் இருக்கும் நடிகை ராதாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்