தனக்கு மகள் இல்லையே என வருத்தப்படும் தனுஷ்.. ஆனால்
நடிகர் தனுஷ்
உலகளவில் தற்போது பிரபலமான நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தின் மீது அளவுக்குக்கடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் இப்படம் D50. இப்படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
நடிகர் தனுஷுக்கு இரு மகன்கள் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு மகள் இல்லையே என கூறி சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தனுஷ் பேட்டி
இந்த பேட்டியில், 'என மகள் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இரு மகன்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு பெண் பிள்ளை இருந்தால் தான் அந்த வீடு நிறைவாக இருக்கும். அப்படி நான் என்னுடைய மகளாக பார்ப்பது லீலாவதி-யை தான். லீலாவதி என்னுடைய அண்ணன் செல்வராகவனின் மகள்.
லீலாவதிக்கு அவருடைய தாய், தந்தை, தாத்தா, பாட்டிக்கு பிறகு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்தது சித்தப்பா நான் மட்டும் தான். நான் என்ன செய்தாலும் அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய பாடலை பார்க்காமல் சாப்பிட மாட்டார். அந்த அளவிற்கு லீலாவதி என் மீதி பாசம் வைத்துள்ளார்' என தனுஷ் பேசியுள்ளார்.
Selva na Daughter Leelavathi is Dhanush na Biggest fan❤️?#CaptainMiller | @dhanushkraja pic.twitter.com/KAtzfgqAHu
— Jeeva Dhanush (@DhanushStan1) July 15, 2023
ரசிகர்கள் கொண்டாடிய Sound Of Madras! ரோபோ ஷங்கர், மணிகண்டன் உட்பட பங்கேற்ற முன்னணி நட்சத்திரங்கள்
You May Like This Video