இளையராஜாவின் பயோப்பிக்கில் நடிக்கும் மாஸ் நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு!
இளையராஜா
இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 47 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 31 -ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பயோப்பிக்
சமீபகாலமாக இளையராஜா பயோப்பிக்கின் எழுத்து பனி நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானது.
தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இளையராஜாவின் தீவிர ரசிகரான இயக்குனர் பால்கி, அவரின் பயோப்பிக்கில் பிரபல நடிகர் தனுஷை வைத்து இயக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் தனுஷும் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இதற்கு ஓகே சொல்லுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபுதேவா - ஐஸ்வர்யா ராய் தவறவிட்ட சூப்பர் ஹிட் படம்?..அதும் 90ஸ் கீட்ஸின் பேவரைட் பிலிம்