முதல் முறையாக அஜித்துடன் நடிக்கவிருந்த தனுஷ்.. இயக்குனர் செல்வராகவன்.. படம் பெயர் என்ன தெரியுமா
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், தமன்னா என பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளார்களாம். அஜித் நடிப்பில் பில்லா, அட்டகாசம் போன்ற கேங்ஸ்டர் படங்களை பார்த்து இருக்கிறோம்.
மிஸ் ஆன மாஸ் கூட்டணி
ஆனால், அவர் நடிப்பதாக இருந்து ட்ராப் செய்யப்பட்ட கேங்ஸ்டர் திரைப்படம் தான் காசிமேடு. ஆம், செல்வராகவன் இயக்கத்தில் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து நடிப்பதாக இருந்த திரைப்படம் காசிமேடு.
இப்படம் சில காரணங்களால் திடீரென ட்ராப் செய்யப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. இதை நடிகர் பரத் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இப்படம் மட்டும் நடந்திருந்தால், கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு வெறித்தனமான கேங்ஸ்டர் திரைப்படம் கிடைத்திருக்கும்.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க நடிகர் ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
