தேசிய விருது வென்ற தனுஷின் திரைப்படத்தில் நீக்கப்பட்ட முக்கிய நடித்த காட்சிகள்! என்ன காரணம் தெரியுமா
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அதன்படி இதற்குமுன் தனுஷ் நடிப்பில் வெளியான முக்கிய திரைப்படங்களான கர்ணன், அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களை விட திருச்சிற்றம்பலம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.
மாற்றப்பட்ட கதாநாயகி
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில் நடிகை டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்ததே திரிஷா தான்.
அவரின் நடிப்பில் பெருபலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் திடீரென அப்படத்தில் இருந்து விலகியுள்ளார். இதனால அவரின் கதாபாத்திரத்தில் நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார்.
தொடர் தோல்வியில் நடிகர் விக்ரம்.. கடைசியாக ஹிட் ஆன படம் எது தெரியுமா