தனுஷின் இட்லி கடையை பல கோடி கொடுத்த வாங்கிய OTT நிறுவனம்.. எவ்வளவு தெரியுமா
இட்லி கடை
நடிகர் தனுஷ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம்தான் இட்லி கடை. பா. பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை தொடர்ந்து நான்காவதாக தனுஷ் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
OTT மார்க்கெட்
OTT மார்க்கெட் முன்பு போல் இல்லை. கொரோனா காலகட்டத்திற்கு பின் முன்னணி நடிகர்களின் படங்களை எவ்வளவு கோடி கொடுத்தாவது வாங்கிவிடவேண்டும் என முன்னணி OTT நிறுவனங்கள் போட்டியிட்டனர்.
ஆனால், தற்போது முன்னணி நடிகர்களின் படமாகவே இருந்தாலும், தங்களுடைய பட்ஜெட்டிற்கு ஒத்துபோகிறதா என பார்த்துவிட்டு, அதன்பின் தான் வாங்குகிறார்கள். இப்படி ஆகிவிட்டது நிலைமை. இதனால், பல படங்கள் OTT-யில் விற்பனை ஆகாமலேயே கிடக்கின்றன.
இந்த நிலையில், தனுஷின் இட்லி கடை திரைப்படம் ரூ. 45 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. OTT மார்க்கெட் சரிவை சந்தித்து இருக்கும் இந்த நிலையில், தனுஷின் படம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.