முதல் நாளில் தனுஷின் ஓம் படம் செய்யும் வசூல் எவ்வளவு?... கணிக்கப்பட்ட விவரம்...
ஓம் படம்
அமரன் பட வெற்றியை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓம்.
இந்த படத்தில் தனுஷுடன் மலையாள சினிமாவின் டாப் நாயகன் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்க சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

சந்தனக் கட்டை கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 6 மணி காட்சி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முதல் நாள்
படம் இன்று நவம்பர் 20 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாக முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்க்க தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் கமலா திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள தனுஷின் ஓம் படம் முதல் நாளில் மட்டுமே எவ்வளவு வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளில் ரூ. 35 கோடி வரை படம் வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.