நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான சிறந்த திரைப்படங்கள் !
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ள தனுஷ் ஆரம்பத்தில் தனது உடலமைப்பால் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தார். மேலும் தற்போது அவர் ஹாலிவுட் அளவு சென்று இந்தியா சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். அப்படி தமிழில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் பிஸியாக உள்ள தனுஷ் ஹாலிவுட் The Grayman படத்திலும் நடித்திருந்தார். அப்படி இன்று தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக உள்ள நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் வெளியான சில சிறந்த படங்கள் குறித்த பட்டியலை தான் பார்க்கவுள்ளோம்.
காதல் கொண்டேன்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். தனுஷ் ஒரு சிறந்த நடிகராக அனைவராலும் அறியப்பட ஒரு முதல் காரணமாக அமைந்ததே காதல் கொண்டேன் திரைப்படம் தான். மேலும் செல்வராகவான் என்ற ஒரு இயக்குனரை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்ததே காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தான். அப்படியான சிறந்த திரைப்படமான காதல் கொண்டேன் சிறந்த விமர்சனங்களை பெற்று அப்போது பெரிய வெற்றியடைந்தது.
புதுப்பேட்டை
மீண்டும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2006 ஆண்டு வெளியானது புதுப்பேட்டை. அதுவரை வெளியான கேங்ஸ்டர் பட பாணியில் இருந்து மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு வெளியானது புதுப்பேட்டை திரைப்படம். கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பு பெரியளவில் கொண்டாடப்பட்டது. தமிழ் சினிமாவின் சிறந்த கேங்ஸ்டர் படங்களை எடுத்துப்பார்த்தால் நிச்சயம் புதுப்பேட்டை திரைப்படம் இடம்பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆடுகளம்
இரண்டாவது முறையாக இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான திரைப்படம் ஆடுகளம். சேவல் சண்டை மற்றும் கருப்பு தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சம்பவங்கள் குறித்து எதார்த்தமாக காட்டிய திரைப்படம் ஆடுகளம். 2010 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்காக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தேசிய விருதுகளை வென்றனர். இப்படத்திற்கு பின்பே வெற்றிமாறன் மற்றும் தனுஷின் அலை தமிழ் திரையுலகை தாக்க தொடங்கியது. அதன்பிறகு அவர்கள் கூட்டணியில் வெளியான அனைத்தும் சிறந்த படைப்பு தான்.
வடசென்னை
மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. திறமையான கேரம் போர்டு பிளேயரான அன்பு கேங் வாரில் கலந்து கொண்டு எப்படி தனக்கு வரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்பதே இந்த வடசென்னை. வெற்றிமாறனின் கதைக்களம் மற்றும் அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நம்மால் மறந்துவிட முடியாது. மேலும் அன்பு கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் மூன்று வெவ்வேறு வயதில் அன்புவின் பரிமாணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
அசுரன்
தொடர்ந்து நான்காவது முறையாக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். வெக்கை என்னும் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படத்தை வெற்றிமாறன் தனது ஸ்டைலில் சில விஷயங்களை சேர்த்து அனைவராலும் ரசிக்கும் படியான படைத்தை கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி சிவசாமியாக தனுஷ் வாழ்ந்திருப்பார் என்றே கூறலாம் படம் தொடக்கம் முதல் முடிவு வரை தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பை யாராலும் மறக்கமுடியாது. அப்படி சிறந்த அசுரன் படத்திற்காக தனுஷ் மீண்டும் ஒரு தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை