இயக்குனர் தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்
இயக்குனர் தனுஷ்
நடிகராக முன்னணி அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன்பின் சில ஆண்டுகள் கழித்து தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் ராயன். இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ராயன் இருக்கிறது. ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி வரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.
இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகி வரும் இப்படத்தில் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் தான் ஹீரோவாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த கோல்டன் ஸ்பாரோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் ரிலீஸ்
இந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஏற்கனவே தனுஷ் இயக்கிய ராயன் படம் வெளிவந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
