முதன்முறையாக இப்படியொரு படத்தில் நடிகர் தனுஷ் ! பான் இந்தியா அளவிலா?
தனுஷ் அடுத்த பிரமாண்ட திரைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் தற்போது பான் இந்தியா படங்களில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா அளவில் வெளியாகி வருகிறது.
மேலும் தற்போது தனுஷின் அடுத்த திரைப்படமும் பான் இந்தியளவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனுஷ் நடிக்கவுள்ள திரைப்படம் பான் இந்தியளவில் உருவாகவுள்ளது. டேவிட் மில்லர் என பெயரிடப்பட்டுள்ள அப்படம் 1930-களில் நடக்கும் கதைக்களமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரமாண்ட ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால், மம்மூட்டி படங்களை மிஞ்சிய பீஸ்ட்.. கேரளாவில் தளபதி விஜய் சாதனை