மோகன்லால், மம்மூட்டி படங்களை மிஞ்சிய பீஸ்ட்.. கேரளாவில் தளபதி விஜய் சாதனை
எதிர்பார்ப்பில் விஜயின் பீஸ்ட் திரைப்படம்
விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தின் முன்பதிவுகள் தொடங்கி தமிழகம் முழுவதும் பெரிய வசூல் சாதனை படைக்கும் என கூறும் அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி பீஸ்ட் படத்தின் முதல் நாள் தமிழ்நாடு காலெக்ஷன் இதற்கு முன் இருந்த சாதனைகள் அனைத்துமே முறியடித்து விடும் என கூறப்படுகிறது.
மாஸ் காட்டும் கேரளா பேன்ஸ்
இந்நிலையில் தமிழ்நாட்டை போல விஜய்க்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள இடம் என்றால் அது கேரளா தான்.
அங்கு விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பேன்ஸ் ஷோஸ் எல்லாம் திரையிடவுள்ளனர். அப்படி அங்கு பீஸ்ட் படத்திற்கு 420 பேன்ஸ் ஷோஸ் ஒட்டவுள்ளார்களாம். இதை வைத்து தற்போதைய வசூல் மட்டும் 3.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே மொத்தமாக பீஸ்ட் திரைப்படம் கேரளாவில் மட்டும் அங்கு சூப்பர் ஸ்டார் நடிகராக உள்ள மோகன்லால் படத்திற்கு நிகராக இருக்கும் என கூறப்படுகிறது.
ராக்கி பாய் கோட்டை கர்நாடகாவை அதிர வைத்த பீஸ்ட்