ரஜினி, விஜய் வழியில் களமிறங்கிய தனுஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்
தனுஷ்
தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியானது.
ஹேப்பி நியூஸ்
இந்நிலையில், தனுஷ் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது தனுஷ், ரஜினி மற்றும் விஜய் பாணியில் ஒரு அதிரடி விஷயம் தனுஷ் செய்யவுள்ளார். ரஜினிகாந்தும், விஜய்யும் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.
அந்த வரிசையில் தனுசும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். கடந்த வாரம் தனுஷ் அவரது ரசிகர்களை சந்தித்திருக்க வேண்டியது.
ஆனால், காலில் லேசான அடிபட்டதால் அவரால் பங்கேற்க முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் ரசிகர்களை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.