பிரபல நடிகையுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்!! லேட்டஸ்ட் தகவல்..
தனுஷ்
தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் தனுஷ். ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் இயக்கம் என இரண்டிலும் மாஸ் காட்டி வருகிறார்.
தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் குபேரா என்ற படத்தில் நடிக்கிறார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் மும்பையின் தாராவியை மையமாக வைத்து குபேரா திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் தகவல்..
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் முக்கியமான ரோலில் முன்னணி நடிகர் நாகார்ஜூனா நடித்து வருகிறார்.
இந்நிலையில் குபேரா படத்தின் ஷூட்டிங் நேற்றிய தினம் துவங்கியுள்ளதாம். படத்தின் ஷூட்டிங்கில் ராஷ்மிகா தனுஷ் இருவரும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரின் காம்பினேஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.