வாத்தி தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி வசூலா.. தனுஷ் கெரியரில் புது சாதனை
வாத்தி
தனுஷின் வாத்தி படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வந்தது. டோலிவுட் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய அந்த படம் Sir என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் ஆனது.
தமிழில் தனுஷ் ரசிகர்கள் வாத்தி படத்தை கொண்டாடிய நிலையில் நல்ல வசூல் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தெலுங்கிலும் தமிழுக்கு இணையாக வசூல் வந்து கொண்டிருக்கிறது. 75 கோடி மொத்த வசூல் வந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் 8ம் நாளே அறிவித்து இருந்தது.
சாதனை
தற்போது தெலுங்கில் மட்டுமே வாத்தி படம் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாம். இதன் மூலமாக வாரிசு, மாஸ்டர் என விஜய் பட சாதனைகளை தகர்த்து இருக்கிறதாம்.
ரஜினி, கமல், விக்ரம், லாரன்சுக்கு பிறகு தெலுங்கில் 30 கோடி வசூல் ஈட்டிய ஹீரோ தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்திய ராதிகா.. பாக்யா எடுத்த அதிரடி முடிவு

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
