முக்கிய நடிகர்களால் தள்ளிப்போகும் நடிகர் தனுஷின் திரைப்பட ரிலீஸ் !
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் தெலுங்கு இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருவதை பார்த்து வருகிறோம். அப்படி விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து தனுஷும் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் வாத்தி. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே தற்போது அதே தேதியில் சில தெலுங்கு திரைப்படங்கள் வெளியாவதால் வாத்தி திரைப்படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து! பலபேரின் நம்பிக்கை உடைந்தது