பாலிவுட் நடிகையுடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய தகவல்
தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறார் நடிகர் தனுஷ்.
தற்போது இவர் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். து மட்டுமில்லாமல் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் திரைப்படம் வருகிற 26 தேதி வெளியாக இருக்கிறது.
புதிய தகவல்!!
இவ்வாறு அடுத்தடுத்து தன்னை முன்னணி இயக்குநர்களின் படங்களில் கமிட் செய்து வரும் தனுஷ் அடுத்ததாக பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.
தேரே இஷ்க் மெயின் படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாம். மேலும் இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் வாரணாசியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை Tripti Dimri நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.