இளையராஜா பயோபிக்கில் நடிக்கப்போகும் முன்னணி ஹீரோ! இயக்குனர் இவர் தான்
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து தொட முடியாத அளவுக்கு பல சாதனைகள் செய்து இருப்பவர் இளையராஜா. அவரது பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அவரது பழைய ஹிட் பாடல்கள் தற்போதைய இளம் தலைமுறையினரையும் கவர்ந்த ஒன்றாகவே இருந்து வருகின்றன.

வாழ்க்கை வரலாற்று படம்
இந்நிலையில் இளையராஜாவின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்பது தனது கனவு என இயக்குனர் ஆர்.பால்கி தெரிவித்து இருக்கிறார். அதில் தனுஷை தான் இளையராஜாவாக நடிக்க வைக்க போவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
தனுஷின் முகம் பார்க்க இளையராஜா முகம் போல தான் இருக்கும். அவரும் இளையராஜாவுக்கு மிகப்பெரிய ஃபேன். அந்த படம் தான் எங்கள் இருவருக்குமே கனவு என பால்கி சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம்...பொண்ணு யாருன்னு தெரியுமா?
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri