தனுஷுக்கு ஜோடியாகும் சமீபத்தில் திருமணமான நடிகை.. யார் தெரியுமா

By Kathick Sep 05, 2023 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகர் என்றால் அது தனுஷ் மட்டும் தான். கிட்டத்தட்ட 9 படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சில படங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் ஏறக்குறைய இந்த கூட்டணி உறுதியாகியுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாகும் சமீபத்தில் திருமணமான நடிகை.. யார் தெரியுமா | Dhanush To Pair Up With Kiara Advani

தனுஷ் படங்கள் 

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் உருவாகி வரும் D50, சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் D 51, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகும் Tere Ishk Mein, மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துவிட்டது.

தனுஷுக்கு ஜோடியாகும் சமீபத்தில் திருமணமான நடிகை.. யார் தெரியுமா | Dhanush To Pair Up With Kiara Advani

அதை தொடர்ந்து ஹெச். வினோத், நெல்சன் திலீப்குமார் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் மூன்று படங்களுக்கும் இதுவரை எந்த ஒரு அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது! அப்படி நடந்தால் எனது மீசையை எடுக்கிறேன்.. சவால் விட்ட நடிகர்

லியோ ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது! அப்படி நடந்தால் எனது மீசையை எடுக்கிறேன்.. சவால் விட்ட நடிகர்

Tere Ishk Mein

இந்த படங்களில் மீண்டும் தனுஷ் ஹிந்தியில் நடிக்கவுள்ள படம் தான் Tere Ishk Mein. ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்தில் வேறு யார்யாரெல்லாம் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளனர் என இதுவரை தெரியவரவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகையான கியாரா அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

தனுஷுக்கு ஜோடியாகும் சமீபத்தில் திருமணமான நடிகை.. யார் தெரியுமா | Dhanush To Pair Up With Kiara Advani

Air Force மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சேகர் என்கிற கதாபாத்திரத்தில் தான் தனுஷ் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என கூறப்படுகிறது.

நடிகை கியாரா அத்வானி ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு இந்த ஆண்டு தான் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US