தனுஷுக்கு ஜோடி இரண்டு சென்சேஷ்னல் ஹீரோயின்ஸ்..இவருக்கு தான் அமையுது
நடிகர் தனுஷ்
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தின் டீசர் நேற்று நாளிரவு வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் D50 இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, துஷாரா விஜயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு பின் தனுஷ் நடிக்கவிருக்கும் D51 படத்தின் அறிவிப்பு தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்துள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார்.
இரண்டு சென்சேஷ்னல் ஹீரோயின்ஸ்
ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் ராஷ்மிகா மட்டுமின்றி மற்றொரு சென்சேஷன் நாயகியும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை சாய் பல்லவியும் கதாநாயகியாக நடிக்க போவதாக தெரிவிக்கின்றனர்.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சாய் பல்லவி - தனுஷ் இருவரும் மாரி 2 படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாடகியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளையராஜா.. வெளுத்து வாங்கிய பிரபலம்