பிரபல பாடகியை மேடையில் மோசமாக நடத்திய இளையராஜா.. வெளுத்து வாங்கிய பிரபலம்
இளையராஜா
திரையுலகில் இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் இளையராஜா. இசையில் இவர் மேதை என்றால், தொடர்ந்து இவரை பற்றி பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளிவந்துகொண்டு இருக்கிறது.
அந்த வரிசையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா செய்த மோசமான விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதில்
"மேடையில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல் ஒன்றை பாடிக்கொண்டு இருந்தார். 'காணாத ஒன்றை தேடுதே' என்ற வார்த்தைக்கு பதிலாக 'காணாத ஒன்றை தோடுதே' என தவறாக பாடலை பாடிவிட்டார். இதனால் அங்கு மேடையில் இருந்து இளையராஜா ஸ்ரேயா கோஷலை பார்த்து ' திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என பாடி ஸ்ரேயாவை அனைவரின் முன்னிலையில் விமர்சனம் செய்கிறார்.
இது எவ்வளவு பெரிய மனிதாபிமான கொலை என்று தெரியுமா. ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காலி பெண். அவர் ஹிந்தி பாடல்களை பாடிக்கொண்டு இருக்கும் பாடகி ஆவார். மேடையில் தவறுதலாக அவர் பாடியதை தமிழில் கிண்டல் செய்தார் இளையராஜா.
தமிழ் மொழி தெரியாத ஒரு பாடகி தவறாக பாடினால் அவரிடம் சொல்லி அதை நிறுத்தவேண்டும். அதை செய்யாமல் அவரை அநாகரிகமான முறையில் கிண்டல் செய்தார் இவ்வளவு பேசிய இசையமைப்பாளர் இளைராஜா. அன்றே அவர் பலருடைய மனதில் இருந்து கீழே சரிந்துவிட்டார் " என பேசியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.
சன் தொலைக்காட்சிக்கு குரல் கொடுப்பவர் இவர் தானா.. இதுவரை நீங்கள் பார்த்திராத அவருடைய புகைப்படம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
