தனுஷ் - திரிஷா சேர்ந்து தவறவிட்ட மாபெரும் விஷயம்.. இதுமட்டும் நடந்திருந்தால்
தனுஷ் - திரிஷா
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தனுஷ் மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் செம பிஸியான நட்சத்திரங்கள். தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் மற்றும் D50 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
மற்றொரு புறம் திரிஷா லியோ, Identity, ராம் பார்ட் 1, என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனுஷ் - திரிஷா இருவரும் இணைந்து இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அப்படத்தின் பெயர் தான் கொடி. இப்படத்தை தவிர்த்து வேறு எந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்ததே இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு கொடி படத்திற்கு முன்பே கிடைத்துள்ளது.
தனுஷ் - திரிஷா தவறவிட்ட வாய்ப்பு
அப்படி இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படம் தான் கண்டேன் காதலை. ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பரத் மற்றும் தமன்னா இணைந்து நடித்திருந்தனர்.
ஆனால், இந்த கதாநாயகன், கதாநாயகி ரோலில் முதன் முதலில் தனுஷ் - திரிஷா தான் நடிப்பதாக இருந்ததாம். திடீரென இருவரும் நடிக்காமல் போனதன் காரணமாக இந்த வாய்ப்பு பரத் - தமன்னாவிடம் வந்துள்ளது. இதை நடிகர் பரத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல் ஹாசனா இது! இளம் வயதில் அவர் செய்த ஜிம் ஒர்கவுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா, இதோ

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
