உனக்கு எதுக்கு அந்த மாதிரி டிரஸ்.. நிகழ்ச்சி நடக்கும் போது என் ஆடையை மாற்ற சொன்னாங்க!.. டிடி பேட்டி
டிடி
தொகுப்பாளர் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது திவ்யதர்ஷினி என்கிற டிடி தான். தன்னுடைய கலகலப்பான பேச்சால் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளும், இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.
பல வருடங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த வந்த டிடி, தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆடையை மாற்ற சொன்னாங்க!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட டிடி, தொகுப்பாளினியாக இருந்த சமயத்தில் தனக்கு நடந்த மோசமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், எந்த கெஸ்ட்டும் என்ன கோபப்படுத்தியதில்லை. ஒருமுறை என்னுடைய நிகழ்ச்சிக்கு ஒரு ஹீரோயின் விருந்தினராக வந்தார். அவர் நிகழ்ச்சிக்கு தாமதமாக தான் வந்தார். அந்த நடிகையின் உடையும் என்னுடைய உடையும் ஒரே மாதிரி இருந்தது.
அப்போது அந்த நடிகை என்னிடம் வந்து, டிடி நீங்க வேற எதும் டிரஸ் எடுத்து வந்து இருக்கீங்களா? என்று சொன்னார். இதை கேட்டதும் எனக்கும் கஷ்டமாகிவிட்டது.
தொகுப்பாளராக இருந்து கொண்டு உனக்கு எதுக்கு இந்த டிரஸ் என்ற கண்ணோட்டத்தில் என்னிடம் பேசினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் மரியாதையாக தான் பேட்டி எடுத்தேன் என்று டிடி கூறியுள்ளார்.
வில்லன் நடிகர் ஆனந்தராஜின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ குடும்ப போட்டோ

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
