தோனி தயாரிக்கும் தமிழ் படம்.. டைட்டில் மற்றும் ஹீரோ, ஹீரோயின் விவரம் இதோ
தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரை தல என ரசிகர்கள் அன்பாக அழைத்து வருகிறார்கள்.
கிரிக்கெட் ஒருபுறம் இருக்க தோனி தற்போது கோலிவுட்டில் படம் தயாரிக்க முடிவெடுத்து 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற நிறுவனத்தை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்.

ஹரிஷ் கல்யாண் ஹீரோ
தற்போது அந்த நிறுவனத்தின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தை அறிவித்து இருக்கிறார்கள்.
ஹரிஷ் கல்யாண் மற்றும் 'லவ் டுடே' இவானா ஆகியோர் தான் இதில் ஜோடியாக நடிக்கிறார்கள். Let's Get Married என இந்த படத்திற்கு பெயர் சூட்டி இருக்கின்றனர்.
ரமேஷ் தமிழ்மணி இயக்கும் படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.
We're super excited to share, Dhoni Entertainment's first production titled #LGM - #LetsGetMarried!
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 27, 2023
Title look motion poster out now! @msdhoni @SaakshiSRawat @iamharishkalyan @i__ivana_ @HasijaVikas @Ramesharchi @o_viswajith @PradeepERagav pic.twitter.com/uG43T0dIfl
எவ்ளோ சிகரெட் பாக்கெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை..ரஜினிகாந்த் பேச்சு