M.S.தோனியின் தமிழ் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா-வா ! சுவாரஸ்யமான தகவல்..
தோனியின் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்னும், CSK அணியின் தற்போதைய கேப்டன்னுமான மகேந்திரசிங் தோனி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்.
இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை தொடர்ந்து தற்போது திரையுலகிலும் நுழையவுள்ளார். ஆம், தோனி தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள தோனி தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் முதல்கட்டமாக நடிகை நயன்தாராவின் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதல் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

கர்ப்பமாக இருக்கும் நடிகை நமீதா, ஸ்பெஷல் நாளில் அவரே வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்