வெற்றிநடைபோடும் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்த மொத்த வசூல்... முழு விவரம்
பைசன் படம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, ராஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியான இப்படம் முதலில் மெதுவாக தொடங்கி 4 நாட்களுக்குள் பிறகு அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
மாரி செல்வராஜ், துருவ், அனுபமா என படக்குழுவினர் ஒவ்வொரு திரையரங்காக சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்கள்.
இடையில் துருவ் விக்ரம் படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் என்ற வீடியோவும் வெளியிட ரசிகர்கள் அவரின் கடின உழைப்பை பாராட்டி வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்
சமீபத்தில் வெளியான படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக பைசன் அமைந்துவிட்டது. 10 நாட்களுக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 59.9 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.