நாக சைதன்யா உடன் இணையும் துருவ் விக்ரம்!! அந்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ?
துருவ் விக்ரம்
ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம். அதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் படத்தில் விக்ரம் உடன் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.
நடிகர் துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
யார் தெரியுமா?
இந்த நிலையில் துருவ் விக்ரம் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு உடன் கூட்டணி வைத்துள்ளாராம். இப்படம் இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நாக சைதன்யா மற்றும் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர் எனவும், மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியானது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
