முதல் படம் ஆதித்ய வர்மா இல்லை, ஆனால்.. ஓப்பனாக சொன்ன நடிகர் துருவ் விக்ரம்!
துருவ் விக்ரம்
பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து தனது தந்தையின் நடிப்பில் வெளிவந்த மகான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
துருவ் விக்ரம் அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஓபன் டாக்!
இந்நிலையில், துருவ் விக்ரம் முன்பு பேட்டி ஒன்றில் தன் படங்கள் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " ஆதித்ய வர்மா படத்தை நான் என் முதல் படமாக பார்க்கவில்லை. ஏன்னென்றால் அது ஒரு ரீமேக் படம். மகான் திரைப்படமும் என் தந்தை திரைப்படம்.
அந்த படத்தில் நான் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்தேன். எனவே அதை நான் எனது 2 வது படமாக பார்க்கவில்லை. இந்த இரண்டு படங்களுக்கு பின் நான் நடிக்கும் படம் தான் எனது முதல் படம்" என்று தெரிவித்துள்ளார்.