சென்சேஷன் இயக்குனருடன் இணைந்து விக்ரம் மகன் துருவ் விக்ரம்.. யாருடன் தெரியுமா
துருவ் விக்ரம்
ஆதித்ய வர்மா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் துருவ் விக்ரம். இவர் பிரபல முன்னணி நடிகரான விக்ரமின் மகன் என்பதை நாம் அறிவோம்.
ஆதித்ய வர்மா படத்தை தொடர்ந்து அடுத்ததாக மஹான் திரைப்படத்தில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து நடித்திருந்தார். இதன்பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருந்தார்.
ஆனால், மாமன்னன் உதயநிதியின் கடைசி படம் என்பதினால், அப்படத்தை முடித்துவிட்டு பின் துருவ் விக்ரம் படத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார்.
சூப்பர் கூட்டணி
இந்நிலையில், துருவ் விக்ரம் அடுத்ததாக பிரபல சென்சேஷன் இயக்குனர் கணேஷ் பாபுவுடன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணேஷ் பாபு சமீபத்தில் தான் டாடா எனும் சென்சேஷன் வெற்றிப்படத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் மணிமேகலை.. வெளிவந்த புகைப்படம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
