துரந்தர் பட நடிகர் கைது.. வீட்டு பணிப்பெண்னிடம் அத்துமீறியதாக அதிர்ச்சி புகார்
சினிமா துறையினர் இதுபோன்ற வழக்குகளில் சிக்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆகி ஹிந்தியில் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து இருந்த துரந்தர் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
துரந்தர் படத்தில் நடித்து இருந்த நடிகர் நதீம் கான் தனது வீட்டின் பணிப்பெண்ணிடம் கடந்த 10 வருடங்களாக பாலியல் ரீதியாக அத்து மீறி இருக்கிறார்.
திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர் இதை செய்து இருக்கிறார். 10 வருடங்களுக்கு மேலாக அவர் பொய் சொல்லி ஏமாற்றி வருவதை அறிந்த அந்த பெண் தற்போது போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

கைது
போலீசார் உடனே நடிகர் நதீம் கானை கைது செய்து இருக்கின்றனர். இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டாலும், முதலில் குற்றம் Malwani பகுதியில் நடந்ததால் வழக்கு அந்த பகுதியின் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
