பிரச்சனை முடிந்து மீண்டும் துவங்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்.. வெறித்தனமாக வெளிவந்த புகைப்படம்
துருவ நட்சத்திரம்
விக்ரம் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் 90% சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் விக்ரமிற்கும், கவுதம் மேனனிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பில் விக்ரம் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார்.

எப்போது தான் இந்த பிரச்சனை முடிவு வந்து, படம் தயாராகி வெளியாகுமோ என்று ரசிகர்கள் பல ஆண்டுகளுக்கு காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மீண்டும் இணைந்த நட்சத்திரங்கள்
இந்நிலையில், பிரச்சனை முடிந்து, மீண்டும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வேலைகள் ஆரம்பம் ஆகியுள்ளது.
ஆம், இயக்குனர் கவுதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்து 'நட்சத்திரங்கள் மீண்டும் சேர்கிறது' என பதிவு செய்துள்ளார்.

இதன்முலம், மீண்டும் துருவ நட்சத்திரம் திரைப்படம் உருவாகவுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri