நீங்கள் பார்த்து ரசித்த தமிழ் சினிமாவின் மாஸ் வசனங்கள்..
தமிழ் சினிமா ரசிகர்கள், நடனம், ரொமான்ஸ், சண்டை, ஒபென்னிங் காட்சி என பல விஷயங்களை பார்த்து, தமிழ் சினிமாவின் மீது அளவுகடந்த அன்பை கொண்டுள்ளார்கள். இவை அனைத்தையும் தாண்டி, நடிகர்கள் பேசும் மாஸ் வசங்கள் பல, இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது. அப்படி, நடிகர்கள் பேசி அசத்திய மாஸ் வசங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
ரஜினிகாந்த் என்றால், 6 வயதில் இருந்து 60 வயது வரை உள்ளவர்களுக்கு உடனடியாக நியாபகம் வரும் மாஸ் வசனம் ' நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' எனும் வசனம் தான். பாட்ஷா படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனத்தை, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் தான், முதலில் இயக்குனரிடம் கூறியுள்ளார். இதன்பின் அந்த வசனத்தை படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
இதே போல், அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனம், ' இன்னிக்கு பணம், பேர், புகழ் இருக்குற திமிருள என் வீட்ட இடுச்சி, என் குடும்பத்த நடுதெருவுக்கு கொண்டுவந்து, எனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடீங்க. அசோக், நீ இதுவரைக்கும் இந்த அண்ணாமலைய நண்பனா தான் பாத்துருக்க. இனிமே நீ இந்த அண்ணாமலைய விரோதியா பாக்கப்போற. இந்த நாள், உன்னுடைய காலெண்டர்ல குறிச்சு வெச்சிக்கோ. இப்போ இருந்து உன்னுடைய அழிவுகாலம் ஆரம்பம் ஆகிடுச்சு. உனக்கும் எனக்கும் தர்ம யுத்தம் தொடங்கிடுச்சு. இந்த யுத்தத்துல உன்னவிட பேர், புகழ், அந்தஸ்த்த சம்பாதிச்சு, பல அடுக்குமாடி ஹோட்டல்கல கட்டி, உன்னோட முன்னேற்றத்த தடுத்து நிறுத்தி, உன்னோட பணவெறிய ஒழுச்சிகட்டி, நீ எப்பிடி என் வீட்ட இடுச்சி என் குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டு வந்தியோ, அதே மாதிரி நானும் உன் வீட்ட இடுச்சி உன்னையும் உன் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டு வரல, என் பேரு அண்ணாமலை இல்லடா..' என ரஜினி பேசிய இந்த மாஸ் வசனமும் காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாக மாறியள்ளது.
உலகநாயகன் கமல் ஹாசன்
கமல் என்று சொன்னாலே முதலில் நியாபகம் வரும் மாஸ் வசனம், 'நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா' என்ற வசனம் தான். இது, எமோஷனலான இடத்தில் வந்தாலும், அதில் கமல் ஹாசன் நடித்திருக்கும் நடிப்பு மாஸ் எலிமண்ட்ஸ்களை உள்ளடிக்கியிருக்கும்.
அதே போல், 'நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல', 'என் கண்ணு வேணும்னு கேட்டியாமே', 'மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன், மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்'. 'வீரமுனா என்னென்னு தெரியுமா'. 'நான் கடவுள் இல்லன்னு எங்கேங்க சொன்னேன். இருந்தா நல்ல இருக்கும்னு தான் சொல்றேன்'. 'உனக்குள்ள முழிச்சிகிட்டு இருக்குற அதே மிருகம் தான் எனக்குள்ள தூக்கிகிட்டு இருக்கு, அதே தட்டி எழுப்பிடாத'. இதை போல் ஒவ்வொரு படத்திலும் கமல் ஹாசன் பேசிய சிறு சிறு வசங்களும், ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் என்று சொன்னால், அனைவருக்கும் உடனடியாக நியாபகம் வருவது, ஒரே ஒருவரின் முகம் மட்டும் தான். தற்போது நடிகர் விஜயகாந்த் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தனது படங்களில், அவர் பேசிய வசங்களின் மூலம், இன்றும் நம் மனதில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.
விஜயகாந்தின் மாஸ் வசனம் என்றால், 'மன்னிப்பு, தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்த'. இந்த வசனத்தை இன்று கேட்டாலும், செம மாஸாக இருக்கும். அதே போல், 'கரன்ட்ட தொட்ட சாதாரண மனுஷனுக்கு தான் ஷாக் அடிக்கும். நான் நரசிம்மா, என்ன தொட்ட, அந்த கரண்டுகே ஷாக் அடிக்கும்'. 'துளசி வாசம் மாறுனமும் மாறும், ஆனா இந்த தவசி கொடுத்த வாக்கு மாறாது'. இதுமட்டுமின்றி நாட்டுக்காக விஜயகாந்த் தனது படங்களில் பேசிய பல மாஸ் வசங்களும் நம் மனதை விட்டு நீங்க இடத்தை பிடித்துள்ளது.
தளபதி விஜய்
தமிழ் சினிமாவின் மாஸ் வாசங்களுக்கு சொந்தக்காரர் என்றால் அது, தளபதி விஜய் தான். இவர் பேசியதில், I Am Waiting என்ற வசனம் தான், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே போல், 'வாழ்க்க ஒரு வட்டம் டா, இங்க ஜெய்கிறவன் தொப்பாம், தோக்குறவேன் ஜெயிப்பான்'. 'நீ அடிச்சா பீசு, நான் அடிச்சா மாஸு'. 'இந்த ஏரியா, அந்த எரியா, இந்த இடம், அந்த இடம், எங்கேயுமே எனக்கு பயம் கிடையாதுடா. ஏன்னா, ஆல் எரியவிலையும் ஐய்யா கில்லி டா'. 'நாங்க அப்பன் பேச்ச கேட்க மாட்டோம். ஆனா, அதே அப்பனுக்கு ஒரு பிரச்சனைனா, எவன் பேச்சையும் கேட்க மாட்டோம்'. 'போலீஸ் வந்து ஒன் அவர் ஆச்சுடா'. 'ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன்'. போன்ற பல மாஸ் வசங்களை பேசி, மாஸ் ஹீரோவாகியுள்ளார் விஜய்.
AK அஜித் குமார்
அஜித் என்றால் மாஸ் - மாஸ் என்றால் அஜித் என்று கூட கூறலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு, மாஸ் வசங்களை பேசியும், மாஸ் காட்சிகளில் நடித்தும் இருக்கிறார் அஜித்.
இவர் பேசியதில் ' டேய் என் வாழ்க்கைல ஓவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும், நானா செதுக்குனதுடா; என்று பில்லா 2 படத்தில் அஜித் பேசும் வசனம் இன்றும் செம மாஸ் தான்.
அதே போல், 'Money, Money, Money'. 'எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் வேண்டாம். ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்'. 'சரித்திரத்த ஒரு தடவ பாருங்க. நாம வாழணும்னா யார் வேணாலும், எத்தன பேர வேணாலும், கொள்ளலாம்' 'நான் தனி ஆள் இல்ல. நூறு கோடி பேர்ல ஒரு ஆள். ஆறு கோடி பேர்ல மொத ஆள்'. 'தெறிக்கவிடலாமா'. உள்ளிட்ட பல மாஸ் வசனங்களை பேசியுள்ளார் அஜித்.
தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக இருக்கிறாரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்